முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ காலிபணியிடங்கள் குறித்து அறிக்கை: அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

சென்னை, சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "தமிழக மருத்துவத்துறையில் 6 ஆயிரத்து 744 நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 18 ஆயிரத்து 460 பணியிடங்கள் இதுவரை நிரப்பி இருக்கிறோம். ஆனால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காலிபணியிடங்கள் குறித்து எதும் தெரியாமல் அறிக்கை விடுகிறார். எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத தலைவராய் சீமான் இருப்பது வருத்தமளிக்கிறது.

2 ஆயிரத்து 353 பணியிடங்களை நிரப்ப 23 ஆயிரத்து 917 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இவர்களின் தகவல்கள் சரி பார்க்கப்பட்டு வருகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் ஜனவரி 27-ம் தேதி ஒரே கட்டமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும். தேர்வு நடத்திய பிறகு அதில் இருந்து முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

ஐகோர்ட்டின் தீர்ப்பை ஒட்டி சுகாதார ஆய்வாளர்களை நியமிக்க தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்னும் கருத்து ஏற்புடையதல்ல. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 1,002 டாக்டர்கள் உட்பட செவிலியர்கள் தொடங்கி பாதுகாவலர்கள் வரை 4 ஆயிரத்து 870 பேர் பணியில் உள்ளனர்.

15 ஆயிரம் வரை புறநோயாளிகளாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வருகிறார்கள். 2021 ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு வருகை புரிந்த எண்ணிக்கையை பாருங்கள். யாரும் யாரையும் பதட்ட படுத்த வேண்டாம். பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து