முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: சொத்துகளை விற்று கடன்களை அடைக்க அறிவுறுத்தல்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      இந்தியா
Jet-Airways-2024-11-07

புதுடெல்லி, நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் சொத்துகளை விற்று கடன்களை அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை நிறுத்தியது. ஜெட் ஏர்வேஸ் திவாலானதையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் பொருட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(NCLAT) இதற்கு அனுமதி அளித்தது.

அதன்படி, ஜலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. இதற்காக முதல் தவணையாக ரூ. 350 கோடி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், அந்த நிறுவனம் ரூ. 200 கோடியை மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ, கனரா வங்கி உள்ளிட்டவை, நிபந்தனைகளை பின்பற்றத் தவறியதாக ஜலான் கல்ராக் நிறுவனம் மீது குற்றம்சாட்டியது.

இந்நிலையில் ஜெட்ஏர்வேஸ் தொடர்பான வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நேற்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தீர்வு காண முடியாததால் திட்டம் தோல்வியடைந்ததால் தற்போதைய மோசமான நிதிச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சொத்துகளை விற்று கடன்களை அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனத்தால் வாங்கப்பட்ட கடன்களை அடைக்க ஒருவரை நியமிக்கவும் கடன்களை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கவும் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐயிடம் கனரா வங்கி புகார் அளித்ததையடுத்து, அந்த நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா, அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து