முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 போட்டிகள் டி-20 தொடர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      விளையாட்டு
7-Ram-50-copy

Source: provided

டர்பன்: 4 போட்டிகள் டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா  அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இளம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்துள்ளது. 

நியூசிலாந்து அணி.... 

இந்தியா தென்னாபிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர் தற்போது தோல்வி பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய டி20 அணி அந்த தோல்விக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த டி20 தொடரில் வெற்றி பெற முயற்சிப்பார்கள். 

வரலாறு படைத்த...

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கடந்த ஜூன் 29ஆம் தேதி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இறுதிப்போட்டி தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக தென் ஆப்பிரிக்க அணி தங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்த தயாராகி வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் இளமை மற்றும் அனுபவம் கலந்த வீரர்களும் தென்னாப்பிரிக்கா அணியில் அதே அளவு திறமை கொண்ட வீரர்களும் இருக்கின்றனர். 

27 போட்டிகளில்... 

முதல் நான்கு போட்டிகளும் இன்று (8-ம் தேதி), 10, 13, 15ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த நான்கு போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. இது இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மற்றும் இணையதளத்தில் ஜியோ சினிமா ஆப்பில் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் அதில் 15 போட்டிகளில் இந்திய அணியும், 11 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றிருக்கிறது ஒரு போட்டியில் முடிவு இல்லை. மேலும் வருகிற 22ம் தேதி முதல் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து