முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு அந்தஸ்து தீர்மானத்துக்கு எதிர்ப்பு: காஷ்மீர் பேரவையில் 3-வது நாளாக அமளி : எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      இந்தியா
Kashmir-Assembly--2024-11-0

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்றும் 3-வது நாளாக அமளியில் ஈடுபட்டனர்.

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும், சட்டப்பிரிவு 370 தொடர்பாக சட்டப்பேரவையில் கடந்த 5-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.  பாகிஸ்தானின் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சபாநாயகர் அப்துல் ரஹிமின் இருக்கைக்கு அருகே திரண்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்துக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். அவர்களை அவர்களின் இருக்கைக்குச் சென்று அமருமாறு சபாநாயகர் கூறினார். எனினும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்துல் ரஹிம் உத்தரவிட்டார். இதையடுத்து, 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும் லங்காட் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் குர்ஷித்தும் வெளியேற்றப்பட்டனர்.  

சட்டப்பிரிவு 370 தொடர்பாக ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி கடந்த 5-ம் தேதியன்று ஒரு தீர்மானத்தை முன்வைத்தார். ஜம்மு-காஷ்மீர் மக்களின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களின் முக்கியத்துவத்தை இந்த சட்டமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சட்டப்பிரிவு 370 ஒருதலைப்பட்சமாக நீக்கப்பட்டதற்கு இந்த பேரவை கவலை தெரிவிக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், அதற்கான அரசியலமைப்பு வழிமுறைகளை உருவாக்குவதற்கும், ஜம்மு காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு மத்திய அரசை பேரவை கேட்டுக்கொள்கிறது.

மறுசீரமைப்புக்கான எந்தவொரு செயல்முறையும் தேசிய ஒற்றுமை மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் நியாயமான விருப்பங்கள் இரண்டையும் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த சட்டமன்றம் வலியுறுத்துகிறது என அந்த தீர்மானத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து