முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை. அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் : 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      ஆன்மிகம்
Thiruvannamalai 2024-06-16

Source: provided

தி.மலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை தினமான நேற்று குவிந்த ஏராளமான பக்தர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர். 

அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து,  ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து