முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐப்பசி மாத பவுர்ணமி: சதுரகிரிக்கு செல்ல 13-ம் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      ஆன்மிகம்
Shathuragiri

Source: provided

விருதுநகர் : ஐப்பசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி (15-ம்தேதி), பிரதோஷத்தை (13-ம்தேதி) முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. 

இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பாலித்தீன் கேரிப்பை, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வருகிற 16-ம் தேதி கார்த்திகை மாத பிறப்புன்று பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து