முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி உறுதி

புதன்கிழமை, 13 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-02

Source: provided

சென்னை : மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி ரத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவர் பாலாஜியின்  உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, 

 மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. தலைப் பகுதியில் 4 இடங்களில் காயம் உள்ளது. மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரை கத்தியால் குத்தியவர் 6 மாதங்களாக இங்குதான் தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். 

ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் சொன்னதை கேட்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.  மருத்துவரை தாக்கிய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு நேரம், காலம் பார்க்காமல் சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்கள். இந்த செயலை செய்த இளைஞர் மீது கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து