முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிஸா ஜெகந்நாதர் கோயிலில் ஜனாதிபதி முர்மு வழிபாடு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Murmu 2024-12-04

Source: provided

புவனேஷ்வர் : ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக சுமார் 1 கி.மீ நடந்துவந்து சுவாமி தரிசனம் செய்தார்.

ஜனாதிபதி சாதாரண பக்தரைப்போன்று கிரண்ட் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, சாலையின் இருபக்கமும் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். கோயிலுக்கு வந்தடைந்த முர்மு பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோரை தரிசனம் செய்தார். தரிசனத்தில் இடையூரை தடுக்கும்வகையில் கோயில் சிறிதுநேரம் பொதுமக்கள் தரிசனத்திற்காக மூடப்பட்டது.

ஜனாதிபதி முர்முவுடன் அவரது மகள் இதிஸ்ரீ முர்முவுடன், ஒடிசா மோகன் சரண்மாஜி, துணை முதல்வர் பிரவதி பரிதா, புரி எம்பி சம்பித் பத்ரா மற்றும் பலர் இருந்தனர்.  வழிபாட்டுக்குப் பிறகு முர்மு கூறியது, ஜெகந்நாதரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வந்துள்ளேன். மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன். அவர்களின் நல்வாழ்வை விரும்புகிறேன் என்று அவர் கூறினார். 

கோயிலுக்குள் சுமார் 30 நிமிடங்கள் இருந்தார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வழிபாடு முடித்துக்கொண்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குக் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து