முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு வழக்கு: எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: கொடநாடு  வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 

இது தொடர்பாக ஷோலூர் மட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் வாளையாரைச் சேர்ந்த மனோஜ். சயான், தீபு, சந்தோஷ் சாமி, சதீஷன் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆகியோரையும் விசாரிக்க அனுமதி கோரி கைதான தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீலகிரி மாவட்ட நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கியது. பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளையில் எஸ்டேட்டில் இருந்து மாயமான பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத்தான் தெரியும் என்றும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி பி. வேல்முருகன் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் இந்த வழக்கில் பழனிசாமி மற்றும் சசிகலா ஆகியோரை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத்குமார், கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார். அதையடுத்து நீதிபதி, அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பழனிசாமி தற்போது முதல்வராக பதவியில் இல்லை என்பதால் அவரை எதிர்தரப்பு சாட்சியாக ஏன் விசாரிக்கக் கூடாது என கருத்து தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பி.வேல்முருகன், நீலகிரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரையும் விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து