முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கடலூரில் மத்தியக்குழு ஆய்வு : விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Cuddalore 2024-12-08

Source: provided

கடலூர் : ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கடலூர் மற்றும் புதுச்சேரியில் மத்திய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர். 

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச்செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையில் ஒரு குழு தமிழ்நாடு வந்துள்ளது. 

முன்னதாக ஃபெஞ்சல் புயலினால் விழுப்புரம் மாவட்டத்தில் 240 கிராமங்களும், விழுப்புரம் நகரப்பகுதிகளும் பாதிப்படைந்தன. விளை நிலங்களை பொறுத்தவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 80 ஆயிரத்து 560 ஹெக்டேர் பாதிப்படைந்தன. 

மாவட்டம் முழுவதும் 75 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாதிப்படைந்தன. அதில் நெல் 58 ஆயிரம் ஹெக்டரும் உளுந்து 13 ஆயிரம் ஹெக்டரும், மணிலா 6 ஆயிரம் ஹெக்டர், கரும்பு 3 ஆயிரம் ஹெக்டர் மக்காசோளம் 150 ஹெக்டர் பருத்து 59 ஹெக்டர் பாதிப்படைந்தன. 

புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரத்திற்கு 7 பேர் கொண்ட குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். மத்திய உள் துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான ஒரு குழுவினர் அரசூர், இருவேல்பட்டு, திருவென்ணைய் நல்லூர், சிறுமதுரை திருக்கோவிலூர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். 

அதே போன்று மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் மற்றொரு குழுவினர் வைலாமூர், கருங்காலிப்பட்டு, சென்னாகுனம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். 

ஆய்வின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் உள்ள பகுதியில் இறங்கி பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்ற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் வெள்ளபாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். 

இதனிடையே மாவட்டத்தில் புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேசன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்தியக்குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு கடலூர், பண்ருட்டி தாலுகாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், புதுச்சேரி மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்தனர்.  அதன் பிறகு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புயல் வெள்ள சேதங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மத்தியக்குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். 

இந்த ஆய்வு முடிந்ததும் புயலால் ஏற்பட்டபாதிப்புகளின் விவரங்களை மத்தியக் குழுவினர் சேகரித்து அதனை அறிக்கையாக தயார் செய்து  மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழகத்திற்கு தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து