முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலை தளத்தில் அல்ல: களத்தில் வேலை செய்பவர்கள் நாங்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      தமிழகம்
Anbil-Mahesh 2024-10-14

Source: provided

திருச்சி :  திருச்சியை அடுத்த திருவெறும்பூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது, 

 சம்பிரதாயத்துக்காக மழை, வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு போட்டோ எடுத்து விளம்பரம் தேடி கொள்கின்றனர் என்று விஜய் கூறியுள்ளார். களத்தில் யார் வேலை பார்க்கிறார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். 

சமூக வலைதளத்தில் பணியாற்றுவதை காட்டிலும் களத்தில் பணியாற்றி பார்த்தால் தான் மக்களின் பிரச்னை என்ன என்பது தெரியும். மழை, வெள்ள பாதிப்பு எதுவாக இருந்தாலும் உடனடியாக களத்துக்கு சென்று நிலவரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். 

அதே போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் 2 நாட்களில் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை இப்படி பல பகுதிகளுக்கு 2500 கிமீ பயணித்து புயல் பாதிப்பை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டதுடன் உடனடியாக செய்து தரக்கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எப்போதும் மக்களோடு மக்களாக நாங்கள் இருக்கிறோம். எங்களோடு மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து