முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார் நடிகர் கார்த்தி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      சினிமா
Karthi 2024-12-08

Source: provided

சென்னை : ஃபெஞ்சல் புயலால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி ரூ.15 லட்சத்தை துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து வழங்கினார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கடந்த 1-ந் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உழவன் பவுண்டேஷன் சார்பாக நடிகர் கார்த்தி ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து