முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஜையுடன் தொடங்கிய சதுரங்க ஆட்டம் ஆரம்பம் படப்பிடிப்பு

திங்கட்கிழமை, 9 டிசம்பர் 2024      சினிமா
Caturankaa attam 2024-12-09

Source: provided

வி.வி.எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் சார்பில் வினோத் வி.சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் சதுரங்க ஆட்டம் ஆரம்பம். M.V.ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக சோனியா நடிக்க முக்கிய வேடத்தில் முருகா அசோக்குமார் நடிக்கிறார். இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு, நடிகர் ஆர்.அரவிந்தராஜ், சக்திகுமார், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குநர் பேரரசு பேசுகையில், இன்றைக்கு ஓப்பனிங் என்பது ஒரு நான்கைந்து ஹீரோக்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி என்ன தான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் வேறு பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் மக்களுக்கு பிடித்திருந்தால் தான் அந்த படம் வெற்றி அடைகிறது.

அன்று ஒரு படம் பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலே அது கிட்டத்தட்ட வெற்றி படம் போல தான். ஓரளவுக்கு வசூல் செய்து விடும். ஆனால் இப்போது நிலைமை வேறாக உள்ளது. ஒரு முதல் படத்தின் இயக்குநராக நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறோம் என்பதைவிட நம்மை நம்பிய தயாரிப்பாளரின் நம்பிக்கையை முதலில் காப்பாற்ற வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து