முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கும் சாம்பியன்ஸ் டிராபி : ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா புகழாரம்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      விளையாட்டு
Jaysha 2024-05-10

Source: provided

துபாய் : கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை சாம்பியன்ஸ் டிராபி பிரதிபலிப்பதாக ஐ.சி.சி.  தலைவர் ஜெய் ஷா  தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி... 

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது போட்டி வருகிற 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி தொடர் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

ஜெய் ஷா புகழாரம்...

சாம்பியன்ஸ் டிராபி குறித்து ஐ.சி.சி.  தலைவர் ஜெய்ஷா கூறுகையில், “2025 ஆம் ஆண்டு ஆடவருக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் முக்கிய தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்தத் தொடரின் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானதாக இருக்கும். ஒருநாள் போட்டி திறமைகளின் உச்சத்தை எடுத்துக்காட்டும். இந்தப் பரிசுத் தொகையானது விளையாட்டில் முதலீடு செய்வதற்கும், வருங்காலங்களில் கிரிக்கெட்டின் மதிப்பைக் கூட்டுவதற்கும் ஐ.சி.சி. யின் தற்போதைய நிலைப்பாட்டை கூறுகிறது” எனத் தெரிவித்தார்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

ஐ.சி.சி. யின் சாம்பியன்ஸ் டிராபி ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கான சாம்பியன்ஸ் டிராபி 20 ஓவர் வடிவில் வருகிற 2027 ஆம் ஆண்டு முதல் அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து