முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே 18 - விஸ்வரூபம் படத்தை திரையிட மாட்டோம் என்று இயற்றிய தீர்மானத்தில் அனுமதியில்லாமல் சங்கத்தின் எண், முகவரியை பயன்படுத்தப்பட்டது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் குறித்து வழக்குப்பதிவு கோரிய மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி போலீஸ் கமிஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தீர்மானம் 

சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நடிகர் கமலஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், டெல்லியில் உள்ள இந்திய (வர்த்தக) போட்டிகள் கமிஷனில் ஒரு புகார் செய்துள்ளது. அந்த புகார் மனுவில், டி.டி.எச். மூலம் விஸ்வரூபம் படத்தை வெளியிட எங்கள் நிறுவனம் முடிவு செய்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், விஸ்வரூபத்தை திரையிட மாட்டோம் என்று சட்டவிரோதமான தீர்மானத்தை இயற்றியுள்ளனர்.இதனால், குறிப்பிட்ட தேதியில் விஸ்வரூபம் படத்தை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் என்று கூறியுள்ளார். 

ஆனால், இப்படி ஒரு தீர்மானத்தை எங்கள் சங்கம் இயற்றவில்லை. தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கம் என்பது பதிவு செய்யப்பட்ட சங்கம் கிடையாது.

ஆனால், இந்திய போட்டிகள் கமிஷனில் ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்துள்ள தீர்மானம் கடித நகலில், எங்களது சங்கத்தின் பதிவு எண்ணும், முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தின் பதிவு எண், முகவரி ஆகியவற்றை பயன்படுத்த யாருக்கும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை.

எனவே எங்கள் சங்கத்தின் எண் மற்றும் முகவரியை தவறாக பயன்படுத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் 13.4.2013 அன்று புகார் செய்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 'மனுக்கு போலீஸ் கமிஷனர் வரும் 22-ந் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யும்படி' உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago