முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸில் இடம் பிடித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்

சனிக்கிழமை, 1 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். ஜூடோ கே.கே.ரத்தினம் தாமரைக்குளம் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த கொஞ்சும்குமரி படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்த 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து உள்ள இவர், கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆசியாவிலும் சரி, இந்தியாவிலும் சரி, யாரும் 1200 படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தது இல்லை. குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்களை படத்தில் இடம் பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பேச வைத்தது. இவரது சாதனைகள் மேலும் தொடர்ந்தது.

சமீபத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக அறிமுகம் ஆன தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்தார்.  இவரது சாதனையை பாராட்டி, ராயல் அக்ரே டெய்ரி லிமிடெட் நிறுவனம் சார்பில் இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

இந்த விழாரில் ஏ.வி.எம்.சரவணன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு, வாழ்நாள் சாதனை விருதை ஸ்டண்ட் மாஸ்டர் கே.கே.ரத்தினத்திற்கு வழங்கினார்கள். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே.ரத்தினம் எழுதிய தாமரைக்குளம் டூ தலைநகரம் என்ற சுயசரிதை புத்தகத்தை  வெளியிட்டுள்ளார்.

ஜூடோ கே.கே.ரத்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார். அதில் தனக்கு கலைமாமணி விருது இதுவரை வழங்கப்படல்லை என்றும், தனக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago