முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து பூகம்பத்தில் பலியானவர்கள்எண்ணிக்கை உயர்வு

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

கிறிஸ்ட்சர்ச், பிப்.28 - நியூசிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் பூகம்பம் எற்பட்டதில் பல அடுக்குமாடி வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவிக்கின்றனர். இவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 சமீபத்தில் நடந்த பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200 பேரை காணவில்லை. அவர்களின் நிலை என்னவென்பது தெரியவில்லை. இந்த தகவலை தெரிவித்த நியூசிலாந்து பிரதமர் நாட்டிலேயே மிகப்பெரிய துயரமான சம்பவம் என்று கூறினார். 

இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் ஆகியோருக்கு அனுதாபம் தெரிவித்து நாளை மதியம் 12.51மணிக்கு மெளன அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜான்கே தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்