முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா பகுதி மின் நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

காஸா , ஜூலை.30 - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்தது. இத்தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பெருமளவில் கரும் புகை மூண்டது.

தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், மின் நிலைய செய்திதொடர்பாளர் கூறுகையில், மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் வைக்கப்பட்டிருந்த டாங்கர்களில் ஒன்றை முற்றிலுமாக இஸ்ரேல் படையினர் அழித்துவிட்டனர் என்றார்.

இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே காஸா பகுதியில் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த நிலைமை மேலும் மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா மீதான தாக்குதல் தொடரும். ஐ.நா, அமெரிக்கா நெருக்கடி ஏற்புடையதல்ல என தொலைக்காட்சியில் அறிவித்த சில மணி நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

காஸா தாக்குதலில் இதுவரை பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,110 ஆகவும், இஸ்ரேலியர்கள் எண்ணிக்கை 53-ஆகவும் உள்ளதாக காஸா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago