முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் மசாலா.

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்.

  1. லெக்பீஸ் சிக்கன் - 7.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1
  3. பச்சை மிளகாய் - 3.
  4. பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு  துண்டு.
  5. பூண்டு - 4 பல்.
  6. முந்திரி பருப்பு -6.
  7. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
  8. கரம் மசாலா தூள் -  ¼  ஸ்பூன்.
  9. சோம்பு தூள் -  ¼  ஸ்பூன்.
  10. மஞ்சள் தூள் -  ¼  ஸ்பூன்.
  11. தயிர் - 1 ஸ்பூன்.
  12. பொடியாக நறுக்கிய தக்காளி – 2.
  13. எண்ணெய் - 4 ஸ்பூன்.
  14. பட்டை – 2
  15. ஏலக்காய் -3.
  16. கிராம்பு – 3.
  17. அன்னாசிபூ - 1.
  18. பிரியாணி இலை - 1.
  19. சோம்பு - ஒரு சிட்டிகை.
  20. சீரகம் - ஒரு சிட்டிகை.
  21. மல்லி தூள் - 1 ஸ்பூன்.
  22. காஷ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்.
  23. மிளகுத்தூள் தூள் -  ¼  ஸ்பூன்.
  24. கஸ்தூரி மேத்தி - சிறிதளவு.
  25. உப்பு -தேவையான - அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் குக்கரை  வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம்,3 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு  துண்டு இஞ்சி,பூண்டு 4 பல் மற்றும் 6 முந்திரி பருப்பை போட்டு நன்றாக வேக வைத்து ஒரு பாத்திரத்தில் வடி கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 7 லெக்பீஸ்  சிக்கனை எடுத்து கொள்ளவும். 
  3. இதனுடன் மிளகாய் தூள்  ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள்  ¼  ஸ்பூன்,சோம்பு தூள் ¼  ஸ்பூன்,மஞ்சள் தூள் ¼ ஸ்பூன்,தயிர் 3 ஸ்பூன்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு  நன்றாக கலந்து விட்டு சிக்கனை ஒரு மணி நேரம்  ஊற வைக்கவும்.
  4. ஒரு மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய 2 தக்காளியை போட்டு நன்றாக  அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. வேக வைத்து வடி கட்டி  எடுத்து வைத்துள்ள வெங்காயம், பூண்டு  மற்றும் முந்திரி பருப்பை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக  அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து 4 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
  7. எண்ணெய்  சூடானவுடன் 2 பட்டை,ஏலக்காய் 3,கிராம்பு 3,ஒரு அன்னாசிபூ,ஒரு பிரியாணி இலை,சோம்பு ஒரு சிட்டிகை,சீரகம் ஒரு சிட்டிகை போட்டு நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன்மிக்சி ஜாரில் அரைத்த வெங்காய விழுதை ஊற்றி  நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன் மல்லி தூள் 2 ஸ்பூன்,காஷ்மீரி மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்,மிளகுத்தூள் தூள் ¼ ஸ்பூன்.போட்டு நன்றாக வதக்கவும்.
  10. இதனுடன்மிக்சி ஜாரில் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி,தேவையான அளவு உப்பு போட்டு  நன்றாக வதக்கவும்.
  11. இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு  நன்றாக வதக்கவும்.
  12. இதனுடன் 1/2 கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு கடாயை மூடி போட்டு மூடி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  13. 15 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கலந்து விட்டு, பிரஸ் கிரீம்  சிறிதளவு மற்றும்  கஸ்தூரி மேத்தி சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
  14. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  15. சுவையான சிக்கன் மசாலா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்