முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரட் பக்கோடா

Cooking time in minutes: 
20
Ingredients: 

பிரட் பக்கோடா செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பிரட் துண்டுகள் – 18.
  2. உருளை கிழங்கு - 4.
  3. பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் - 3.  
  4. பூண்டு - 4 பல்.
  5. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.  
  6. புளி - சிறிதளவு.
  7. கொத்த மல்லி - 1 கப்.
  8. கடலைமாவு - 1 1/2 கப்.
  9. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.
  10. தக்காளி சாஸ் - தேவையான அளவு.
  11. சமையல் சோடா - 1 சிட்டிகை.
  12. எண்ணெய் - 1/2 லிட்டர். 
  13. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை:-

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 4 உருளை கிழங்கை போட்டு 4 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் வேக வைத்த உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி  தோல் உரித்து மசித்து  தேவையான அளவு உப்பு போட்டு கலந்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து  3 ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.எண்ணெய் சூடானவுடன்,பொடியா நறுக்கிய 3 பச்சை மிளகாய், 4 பல்பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு புளியை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. இதனுடன்ஒரு கப் கொத்தமல்லி  மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து மல்லி சட்னியை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் கடலைமாவு,மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,சமையல் சோடா  1 சிட்டிகை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. 18 பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் உள்ள  பகுதிகளை அறுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  7. ஒரு பிரட் துண்டை எடுத்து  தயார் செய்து வைத்துள்ள மல்லி  சட்னியை சிறிதளவு எடுத்து தடவி விட்டு அதன்மேல் மசித்து வைத்துள்ள  உருளை கிழங்கை சிறிதளவு வைத்து அதன்மேல் இன்னொரு பிரட்டை மூடி அதன்மேல் சிறிதளவு தக்காளி சாஸை தடவி விடவும்,இதேபோல் எல்லா பிரட்டையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
  9. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள கடலைமாவில் பிரட் துண்டுகளை போட்டு கடலை மாவு பிரட்துண்டின் அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவி பின்னர் ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். 
  10. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்,நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  11. இதேபோல் தயார் வைத்துள்ள எல்லா பிரட்டையும் வேக வைத்து எடுக்கவும்.
  12. பின்னர் அதனை பொடி பொடியாக நறுக்கி விடவும் 
  13. சுவையான பிரட் பக்கோடா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்