முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பூசணி பீட்சா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பூசணி பீட்சா செய்யத்தேவையான பொருட்கள்.

  1. துருவிய சர்க்கரை பூசணி - 1/2 கிலோ.
  2. துருவிய சீஸ் - 150 கிராம்.
  3. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
  4. முட்டை - 3.
  5. சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
  6. தயிர் - 200 கிராம்.
  7. அரிசிமாவு - 150 கிராம்.
  8. பேக்கிங் பவுடர் - 1/2 ஸ்பூன்.
  9. பட்டர் - ஒரு ஸ்பூன்.
  10. கருப்பு திராட்சை - சிறிதளவு.
  11. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;-- 

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய சர்க்கரை பூசணி 1/2 கிலோ,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,3 முட்டை,சர்க்கரை ஒரு ஸ்பூன்,தயிர்  200 கிராம், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
  2. இதனுடன் அரிசிமாவு 150 கிராம்,பேக்கிங் பவுடர்  1/2 ஸ்பூன்,துருவியசீஸ் 150 கிராம், போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் தவாவை வைத்து  ஒரு ஸ்பூன் பட்டரை போட்டு  பரப்பி விடவும்.
  4. பட்டர் உருகியதும்  தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பூசணி கலவையை ஊற்றி பரப்பி விட்டு  தவாவை மூடி போட்டு மூடி சிறிது நேரம் நன்றாக வேக வைக்கவும்.
  5. மூடியை திறந்து சிறிதளவு கருப்பு திராட்சையை மேல் புறம் வைத்து தவாவை மூடி போட்டு மூடி சிறிது நேரம் நன்றாக வேக வைக்கவும்.
  6. ஒரு தட்டை தவாவை  மேல் வைத்து பூசணி பீட்சாவை எடுத்து திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து பூசணி பீட்சாவை இறக்கி தேவையான அளவு வெட்டி பரிமாறவும்.
  8. சுவையான பூசணி பீட்சா ரெடி. 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்