முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மசாலா கார்ன் பர்கர்

Cooking time in minutes: 
20
Ingredients: 

மசாலா கார்ன் பர்கர் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. பர்கர் பன் - 4.
  2. பட்டர் - 2 ஸ்பூன்.
  3. சீஸ் - சிறிதளவு.
  4. பாவ்பாஜ் மசாலா - ஒரு ஸ்பூன்.
  5. உருளைக்கிழங்கு - 3.
  6. ஸ்விட் கார்ன் - 1/2 கப்.
  7. பெரிய வெங்காயம் - ஒரு கப்.
  8. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.
  9. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  10. மல்லி தூள் - 1 ஸ்பூன்.
  11. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்.
  12. சில்லி சாஸ் - ஒரு ஸ்பூன்.
  13. கெட்சப் – ஒரு ஸ்பூன்.
  14. பொடியாக நறுக்கிய  தக்காளி - 1.
  15. மல்லி இலை - சிறிதளவு.
  16. சாட் மசாலா - சிறிதளவு.
  17. எலுமிச்சம்பழ சாறு - 1 ஸ்பூன்.
  18. பொடியாக நறுக்கிய  வெங்காயத்தாள் - ஒரு கப். 
  19. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு.
  20. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோல் நீக்கி இரண்டாக  நறுக்கிய 3 உருளைக்கிழங்கை போட்டு இதனுடன் சிறிதளவு உப்பை  போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி நன்றாக வேக வைத்து உருளைக் கிழங்கை வடி கட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
  3. பட்டர் நன்றாக உருகிய பின்,பொடியாக நறுக்கிய ஒரு கப் வெங்காயத்தாளை போட்டு நன்றாக வதக்கவும்.
  4. இதனுடன் ஒரு கப் பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்,பாவ்பாஜ் மசாலா ஒரு ஸ்பூன்,மல்லி தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்,சில்லி சாஸ் ஒரு ஸ்பூன்,கெட்சப் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன்பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி ஸ்விட் கார்ன் 1/2 கப்,மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் பொடியாக நறுக்கிய சிறிதளவு வெங்காயத்தாள், மல்லி இலை சிறிதளவு மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.
  8. ஒரு தட்டில் 4 பர்கர் பன்னை எடுத்து அதை இரண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  9. தயார் செய்து வைத்துள்ள மசாலா கலவையை பன்னில் பரப்பி வைக்கவும்,அதன் மேல் பொடியாக நறுக்கிய சிறிதளவு பெரிய வெங்காயத்தை வைத்து ஒரு சிட்டிகை சாட் மசாலா சிறிதளவு எலுமிச்சம்பழ சாறை ஊற்றி அதன் மேல் சிறிதளவு சீஸை துருவி போட்டு,பொடியாக நறுக்கிய சிறிதளவு பச்சை மிளகாயை போட்டு அதன் மேல் இன்னொரு பன்னை வைத்து மூடி வைக்கவும்.
  10. இதை போல் எல்லா பன்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  11. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை போடவும்.
  12. பட்டர் நன்றாக உருகிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு மற்றும் பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு போட்டு இதன் மேல் தயார் செய்து வைத்துள்ள பர்கர் பன்னை வைத்து வேக வைக்கவும்.திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
  13. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  14. இதை போல் எல்லா பன்களையும் வேக வைத்துக்கொள்ளவும்.
  15. சுவையான மசாலா கார்ன் பர்கர் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்