முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

திப்பிலியின் மருத்துவ பலன்கள்

  1. ஆஸ்துமா, மார்பு சளி போன்ற வியாதிகள் தீர திப்பிலி பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவாச சம்பந்தமான நோய்களை தீர்க்க முடியும்.  
  2. திப்பிலியில் ப்ரீபயாடிக் என்னும் ஆற்றல் இருப்பதால் வயிற்றுக் கோளாறுகள், வயிற்றுப் புண் போன்ற நோய் எதிர்ப்பு பண்பு காரணமாக உண்டாகும் பிரச்னைகளுக்கு உதவுகிறது.
  3. திப்பிலி வாயு பிரச்னை, நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற செரிமானப் பிரச்னைகளுக்கு உதவுகிறது.
  4. திப்பிலியை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல்,களைப்பு நீங்கும்.
  5. மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல், தொண்டை புண் போன்ற நுரையீரல் பிரச்சனையை சரிசெய்யவும் திப்பிலி உதவுகிறது.
  6. திப்பிலியை இடித்துப் பொடியாக்கி 1 தேக்கரண்டியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், கபம், வாய்வு நீங்கும். செரிமானம் அதிகரிக்கும்.
  7. திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்று வலி,  வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும். 
  8. தொண்டை புண், நுரையீரல் பிரச்சனைகளைக்கு சிகிச்சையளிக்க திப்பிலி உதவுகிறது. 
  9. வாய் சுகாதாரத்தை பாதுகாப்பதில் திப்பிலி முக்கிய பங்கு வகிக்கிறது, பல் வலி, வாய்வழிப் பிரச்னைகளைக்கு நிவாரணியாக திப்பிலி உள்ளது.
  10. திப்பிலி தண்டின் சாறு அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் வலி நிவாரணப் பண்புகளைக் கொண்டுள்ளதால் தொற்று காய்ச்சல், பருவக் காய்ச்சல் குணமாகும். 
  11. திப்பிலியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொழுப்பை கரைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
  12. திப்பிலி உடல் வலியை போக்க உதவுகிறது,அதோடு தூக்கத்தை தூண்டுகிறது.
  13. திப்பிலியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் வலுவடையும்,உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
  14. மலச்சிக்கல் குணமாக திப்பிலியை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்