முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவை அசைக்க முடியாது: என்றும் அவருக்கு தான் வெற்றி : எஸ். கோகுல இந்திரா பேச்சு

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, கருணாநிதி எத்தனை பொய் பித்தாலட்ட அரசியலில் ஈடுபட்டாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவை அசைக்க முடியாது என்று அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசினார்.

ஜெயலலிதாவுக்கு எப்போதுமே வெற்றி தான் என்றும் அவர் கூறினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற அமோக வெற்றி, அரசின் 4 ஆண்டு  சாதனை விளக்க பொதுக்கூட்டம்  அண்ணா  நகர் பகுதி எம்.எம்.டி.ஏ. காலனியில் அண்ணா நகர் பகுதி கழக செயலாளர்  ஏ.இ.வெங்கடேசன் எம்.சி. தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா பேசியதாவது:–

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வாரு வீட்டிலும் ஏதேனும் ஒரு வகையில் ஒரு திட்டம் சென்றடைந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகமும் அம்மாவிடம் அன்பு காட்டி அம்மாவின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அம்மா தீர்க்க தரிசனமாக ஒரு முடிவு எடுத்து தனித்து போட்டியிட்டார். அதன் காரணமாக கழக தொண்டர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும், மேயராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் வரவேண்டும் என முடிவோடு தனித்து கழகத்தை போட்டியிட்ட வைத்தார்.  95 சதவீதம் கழகத்தினர் பொறுப்பில் வந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கழகம் ஒரு பெரும் சக்தியாக விளங்குகிறது.

முல்லைப்பெரியார் நீர்மட்டம் உயர்த்தவும், காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெறவும், அம்மா  ஒவ்வொரு நாளும் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டும், விடாது முயற்சித்தும் தமிழகத்தின் உரிமை காப்பாற்றப்பட்டது. மதுரையில் முல்லைப் பெரியார் தொடர்பான கூட்டத்திற்கு  அம்மா மதுரைக்கு வந்து விட்டு திரும்பமுடியாது என்று அழகிரி கொலை மிரட்டல் விட்ட போது, வீரத்திருமகளாக அம்மா வீரமுடன் மதுரையில் பேசிவிட்டு திரும்பினார். ஆனால் அழகிரி காணாமல் போனார்.

அம்மா மக்கள் பக்கம் உள்ளார். மக்கள் அம்மா மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் அம்மா மீது அன்பு வைத்துள்ளார்கள். அம்மா மீது பாசம் வைத்துள்ளார்கள். இதன் காரணமாக அம்மா ஒரு முடிவெடுத்தார். பாராளுமன்ற தேர்தலுக்கு தைரியமாக தனித்து போட்டியிடும் முடிவெடுத்து ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியாக சென்று கழக அரசின் சாதனைகளையும்,  தீயசக்தி கருணாநிதியின் துரோகங்களையும், காங்கிரஸ் செய்த துரோகங்களை பட்டியலிட்டும், மக்களிடம் விளக்கினார். அதன் காரணமாக 37  தொகுதிகளில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி  பெற்றன.  இதன் காரணமாக துணை சபாநாயகர் பொறுப்பு கழகத்திற்கு கிடைத்தது. இது அம்மாவின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். கருணாநிதி கஜானாவை காலி செய்து விட்டுச்சென்ற போதும், ஆட்சி பொறுப்பு ஏற்ற அம்மா விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம்  என திருமண உதவித்திட்டம், சைக்கிள், லேப்டாப், பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, புத்தகம், காலணி என பல்வேறு நலத்திட்டங்களை அம்மா நிறைவேற்றியுள்ளார்.

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வீரருக்கு அவரது உடல் சொந்த மண்ணுக்கு வருவதற்குள்,  அம்மா அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை உடனடியாக வழங்கினார்.

அம்மா மெட்ரோ ரெயில் துவக்கி வைத்தார். அதனை கருணாநிதியால் தாங்க முடியவில்லை. ஸ்டாலினால் தாங்கி கொள்ள முடியவில்லை. அம்மா 2003ல் விரிவான திட்டங்கள் தீட்டி விவரமான அறிக்கை அம்மா அரசு தயாரித்தது. 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 3 சதவீதம் வேலை முடிந்தது. 4 ஆண்டு அம்மா ஆட்சியில் 73 சதவீதம் முடிந்து ஆலந்தூர்  வரை ரெயில் விடப்பட்டது.

மத்திய அரசு நிதி தரவில்லை

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு சரியாக நிதியை பகிர்ந்து கொடுக்கவில்லை. எல்லா துறைகளிலும் நிதி சரியாக கொடுக்கவில்லை.  கைத்தறி  நெசவாளர்களுக்கு மாநில அரசின் பங்கு உடனடியாக கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு தரவேண்டிய பங்கு 2 வருடங்களாக கொடுக்கவில்லை. எல்லா துறைகளிலும் இந்த நிலைமை உள்ளது. அம்மாவின் சோதனை காலத்தில் தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், தமிழகத்தில் முயற்சி பலிக்காக செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர் கூட்டம் அம்மா தலைமையில் நடைபெற உள்ளது. அம்மா அவர்கள் ஆட்சியில் தான் தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் வந்துள்ளன. தொழில் முதலீடுகள் குவிந்துள்ளன.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால்  ஊட்ட தனி இடங்கள் உருவாக்க அம்மா  திட்டம் தீட்டி அறிவித்துள்ளார். விலைவாசி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அரசு போக்கு வரத்து வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

கருணாநிதி கனவு பலிக்காது

மக்களை குழப்பி ஆட்சி பொறுப்பில் வர தீயசக்தி கருணாநிதி முயற்சிக்கிறார். ஒரு நாளும் தி.மு.க. ஆட்சி வராது. மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அம்மா தான் முதல்வர் ஆவார். அம்மாவுக்கு தான் வெற்றி. இன்று மட்டுமல்ல. என்றும் அம்மாவுக்கு தான் வெற்றி. இந்திய திருநாட்டின் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழைகத்தை ஆளும் முதல்வர் அம்மா பாரதத்தின் சக்தியாக விளங்குவார் என்பது உறுதி இவ்வாறு அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா பேசினார்.

மாணவரணி செயலாளர்  எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. தென்சென்னை வடக்கு மாவட்ட  கழகு செயலாளர்  வி.பி.கலைராஜன், பாண்டுரங்கன், எஸ்.அமீர்பாஷா எம்.சி.,  வ.சுகுமார்பாபு  எம்.சி. டி.தசரதன், ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல்,  முரளிகிருஷ்ணபிரசாத்,  பி.எல்.இராதாகிருஷ்ணன், கே.வெங்கடேசன், நா.ரா.பாபு,  மல்லிகாகந்தன் எம்.சி.,  என்.ரவிச்சந்திரன், பக்தவத்சலம், கூடல்  வே.கோவிந்தன், சடையன்,  கோ.தமிழ்செல்வம், கே.வசந்தகுமார், கே.குப்பன்,  கோ.செழியன், மு.ஸ்ரீராமன்,  ரங்கராஜன், வி.பாலசுந்தரம், பேப்பர் கடை  பன்னீர்செல்வம், ஏ.இராஜேந்திரன்,  அனிஷ்பாபு, எஸ்.ராமு, ஆர்.கணேஷ்,  ஜி.டி.வெங்கடேசன், கே.புருஷோத்தமன்,  ஷாஜகான், பலராமன், அப்பன்ராஜ்,  சண்முகம், ஜி.புருஷோத்தமன், குசேலன்,  கார்த்திகேயன், நித்தியகுமார்,  பி.தீனன், நாசர். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  தமீம் அன்சாரி,  ஏ.எஸ்.பச்சையப்பன், கே.முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து