முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா      அரசியல்
Jagan-Mohan-Reddy-2024-04-2

அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் மே மாதம்13-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

அப்போது அவருடன் கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். முன்னதாக கடந்த 22-ம் தேதி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சார்பாக புலிவெந்துலா தொகுதியை சேர்ந்த உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து