முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளைக்கிழங்கு டோனட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளைக்கிழங்கு டோனட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. உருளைக்கிழங்கு - 300 கிராம்.
  2. ஈஸ்ட் – 5 கிராம்.
  3. அரிசி மாவு - 350 கிராம்.
  4. கோதுமைமாவு -300 கிராம்.
  5. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்.
  6. மேங்கோ பவுடர் - ஒரு சிட்டிகை.
  7. சர்க்கரை - 60 கிராம்.
  8. பட்டர் - 50 கிராம்.
  9. நாட்டு சர்க்கரை - 200 கிராம்.
  10. வெள்ளை எள்ளு - 25 கிராம்.
  11. சோடா உப்பு -1/2 டீஸ்பூன்.
  12. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  13. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;--  

  1. அடுப்பில் குக்கரை   வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கிய 300 கிராம் உருளைக்கிழங்கை போட்டு குக்கரை மூடி மூடி 5 நிமிடம் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்கவும்.
  2. வேக வைத்த  உருளைக்கிழங்கில் உள்ள நீரை வடி கட்டி விட்டு உருளைக்கிழங்கை மசித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துகொள்ளவும்.
  3. இதனுடன்  5 கிராம் ஈஸ்ட்,அரிசி மாவு 350 கிராம்,கோதுமைமாவு 300 கிராம், சோடா உப்பு 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன், 60 கிராம் சர்க்கரை மேங்கோ பவுடர் ஒரு சிட்டிகை,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
  4. இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
  5. இதனுடன் 50 கிராம் பட்டரை போட்டு மாவை நன்றாக கலந்து  5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  6. 5 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து சிறு சிறு உருடைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை லேசாக தட்டி போட்டு பொரிக்கவும்.
  9. திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  10. அடுப்பில் கடாய் வைத்து 200 கிராம் நாட்டு சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  11. நாட்டு சர்க்கரை உருகி பாகு பதத்திற்கு வந்த பின் 25 கிராம் வெள்ளை எள்ளை போட்டுகலந்து விடவும்.
  12. எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்ததை எடுத்து சர்க்கரை பாகில் முக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  13. சுவையான உருளைக்கிழங்கு டோனட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்