முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலை, ராமேஸ்வரம் கொண்டு வந்து, உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, தமிழக அரசின் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்பி வைத்த 7 அமைச்சர்கள் உடனிருந்து, அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்ததற்காக, அப்துல் கலாமின் குடும்பத்தினர், முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

அப்துல் கலாமின் மறைவுச் செய்தி அறிந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா, ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்ததுடன், இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும்,அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ள தாம், உடல்நிலை கருதி, அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், தமது சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் 7 அமைச்சர்கள், டாக்டர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

கலாமின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராமேஸ்வரம் பகுதியில், அவரது உடலை அடக்கம் செய்வதற்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்குவதற்கு, முதலமைச்சர் . ஜெயலலிதா உத்தரவிட்டதுடன், கலாமின் இறுதிச் சடங்குகளையொட்டி, தமிழகத்தில் நேற்று பொது விடுமுறையாக அறிவிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

தமது சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் 7 அமைச்சர்களை ராமேஸ்வரத்திற்கு அனுப்பி, டாக்டர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, உடல் நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த 3 நாட்களாக முழு அளவில் நிறைவேற்றித் தந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, அப்துல்கலாம் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதுடன், நேற்று பொது விடுமுறையும் அறிவித்து, இறுதிச் சடங்குகள் பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிவதற்கு, அனைத்து ஏற்பாடுகளையும் செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, டாக்டர் கலாமின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து