முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார்சிங் மீது பாலியல் புகார்

புதன்கிழமை, 3 பெப்ரவரி 2016      விளையாட்டு
Image Unavailable

சண்டிகார் - இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார்சிங் மீது அவரது காதலி பாலியல் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார்சிங், 2008–ம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். சிறந்த வீரராக வளம்வந்த இவர், கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்பொழுது இவர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்தார்சிங் மீது அவரது நீண்ட நாள் காதலி பரபரப்பான செக்ஸ் புகாரை கூறியுள்ளார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னை கற்பழித்ததாக அந்த பெண் லூதியானாவில் உள்ள கம்கலான் போலீஸ் நிலையத்தில் சர்தார்சிங் மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் புகாரில் கூறி இருப்பதாவது:– இந்திய வம்சாவழியை சேர்ந்த நான் இங்கிலாந்தில் வசிக்கிறேன். ஹாக்கி வீராங்கனை என்ற முறையில் 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது சர்தார்சிங்குடன் அறிமுகம் ஏற்பட்டது. எங்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்வதாக கூறி என்னிடம் வாக்குறுதி அளித்தார். அவரால் நான் கர்ப்பம் ஆனேன். பின்னர் அதை கலைக்க சொன்னார்.என்னுடன் திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். ஆனால் இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார்.

என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சர்தார்சிங் தொந்தரவு செய்கிறார். மேலும் என்னை மிரட்டுகிறார். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.  இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்தார்சிங் அரியானா மாநில போலீஸ் துணை சூப்பிரண்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்