முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலநாட்களில் வங்கி வட்டி விகிதம் குறையும் : பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஏப்ரல் 2016      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி  - இன்னும் சில நாட்களில் வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்தா தாஸ் நேற்று தெரிவித்தார். வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25சதவீதம் குறைத்தது. இந்த வட்டி குறைப்பால் வங்கிகளும் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கின்றன. இது குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி தாஸ் காந்தா நேற்று கூறுகையில், இந்த மாதம் 5ம்தேதியன்று ரிசர்வ் வங்கியின் இரு மாத கொள்கை முடிவு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அந்த வங்கி கடன் வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்தது-வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களை மேலும் கூடுதலாக்க  இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.  வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால், பண வீக்க விகிதம் கட்டுப்பாட்டு நிலையில் இருக்கும்.இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.5சதவீதத்தைவிட கூடக்கூடாது என்பதில் நிதியமைச்சர் உறுதியாக உள்ளார். வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் இன்னும் சில நாட்களில் குறைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்