முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

திங்கட்கிழமை, 2 மே 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்க உள்ளது. கடும் வெயிலுக்கு ஆறுதலாய் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இது மே 29ம் தேதி வரை 26 நாட்கள் நீடிக்கும். இந்த காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும். அதாவது, குறைந்த பட்சம் 100 டிகிரியில் இருந்து 110 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், தமிழகத்தில் கடந்த மாதம் முதலே வெயில் வா்டடி எடுக்க தொடங்கியுள்ளது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விளாசி வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக கடந்த வாரங்களில் திருச்சி, வேலூரில் 110 டிகிரி வெயில் பதிவானது, இருந்தபோதும் தொடர்ச்சியாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். அடுத்த ஒரு சில நாட்களுக்கு இதே வெப்பநிலை நீடிக்கும். பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் லேசான மற்றும் மிதமான மழை, அனைத்து மாவட்டங்களிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்