முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் விஜயக்குமார் எம்.பி. சந்திப்பு

திங்கட்கிழமை, 6 மார்ச் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி,

மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயக்குமார் , கேரள மாநில முதலமைச்சர்  பினராய் விஜயன் திருவனந்தபுரம், தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்கும்வகையில், நெய்யார் இடதுகரை சானலில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தலுடன், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.  அதற்கு கேரள முதலமைச்சர் , தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார்.பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் , செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை பேரில், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கேரள முதலமைச்சர்  பினராய் விஜயன் அவர்களை, இன்று திருவனந்தபுரம், தலைமை செயலகத்தில் குடிநீருக்காக, நெய்யார் இடதுகரை சானலில் தண்ணீர் திறந்துவிட நேரில் சந்தித்து, வலியுறுத்தப்பட்டது.  அதற்கான கோரிக்கை மனுவையும் வழங்கப்பட்டது.  அப்போது கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நெய்யாறு இடதுகரை சானலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதலமைச்சர்  பினராய் விஜயன்  கூறினார்கள்.  இதில் கன்னியாகுமரி பொதுப்பணித்துறை ( அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  நீர்வள ஆதார அமைப்பு)  சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர்   பொறி. மோகனதாஸ், பொறி. ரமேஷ், துணை செயற் பொறியாளர் பொறி மல்கி,   கனகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்