முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபி அரசு மருத்துமணையில் எலும்பு முறிவு சிகிச்சையில் சாதனை

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      ஈரோடு

கோபி அரசு மருத்துமணையில் எலும்பு முறிவு சிகிச்சையில் சாதனை

கோபி.ஏப்.18

கோபி அரசு மருத்துமணையில் எலும்பு முறிவு சிகிச்சையில் சாதனை படைத்துள்ளதாக தலைமை மருத்துவர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

அரசு மருத்துவமனை,கோபிசெட்டிபாளையத்தில் கடந்த ஓராண்டில் மருத்துவமனை நிர்வாகத்தாலும், பல்வேறு துறை மருத்துவர்களாலும் செய்யப்பட்டுள்ள பணிகள் விவரம் ,ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை எலும்புமுறிவு பகுதியில் 70 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது .இதில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை .எலும்பு முறிவு சீராக்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது . எலும்பு முறிவிற்கான மாவுக்கட்டு சிகிச்சை 145 நோயாளிகளுக்கு போடப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள்,கடந்த ஓராண்டில் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சி.டி,ஸ்கேன் சென்டர் மூலம் 3266 சி.டி.ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்ற மார்ச் மாதத்தில் 377 ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கிறது .காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இலவசமாகவும் மற்றவர்களுக்கு ரூபாய் 500  கட்டணத்திலும்   ஸ்கேன் வசதி செய்யப்படுகிறது .அரசுமருத்துவமனை கோபியில் நடக்கும் பிரசவங்கள் படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்ற மாதம் அதிகபட்சமாக 161 பிரசவங்கள் நடைபெற்றிருக்கிறது .கடந்த ஓராண்டில் மட்டும் 1459 பிரசவங்கள் இம்மருத்துவமனையில் நடைபெற்றிருக்கிறது .

இம்மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட நவீன வசதியுடன் கூடிய பச்சிளம் குழந்தைகள் பிரிவு செயல்பட்டு வருகிறது .இப்பிரிவில் கடந்த ஓராண்டில் 669 பச்சிளம் குழந்தைகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் .இங்கு அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது .கடந்த ஓராண்டில் வரை  அரசு மருத்துவமனையில் லென்ஸ் பொருத்தி செய்யப்படும் கண் புரை அறுவை சிகிச்சைகள் 1089 பேருக்கு செய்யப்பட்டிருக்கிறது  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மொத்தம் 425 அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது .இதில் லேப்ராஸ்கோப்பிக் மூலம் ஓட்டுக்குடல்  ,குடலிறக்கம் உள்ளிட்ட  கிச்சைகளும்,மேலும் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள்  செய்யப்பட்டுள்ளது .அரசு மருத்துவமனை இரத்தவங்கி மூலம் 34 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 2119 யூனிட் இரத்தம் பெறப்பட்டிருக்கிறது .இம்மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அமரர் ஊர்தி மூலம் ,பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட பிரேதங்கள் மற்றும் அனைத்து பிரேதங்களும் இலவசமாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது .

வர இருக்கும் வசதிகள்

மேலும் இம்மருத்துவமனையில் 2.25 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது

இம்மருத்துவமனையில் டயாலிசிஸ் யூனிட் வசதி தொடங்கப்பட இருக்கிறது.மேலும் வருங்காலத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதியும் தொடங்கப்பட இருக்கிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்