முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் சு.பாப்பம்பாடி கிராம நிர்வாக அலுவலருக்கு பணிநிறைவு பாராட்டு விழா: ஆர்டிஒ உமாமகேஸ்வரி பங்கேற்பு

வியாழக்கிழமை, 4 மே 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையில் சு.பாப்பம்பாடி கிராம நிர்வாக அலுவலர் அ.ஷர்புதீனின் பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. இதில் தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி கலந்து கொண்டார்.

பணிநிறைவு  விழா

திருவண்ணாமலை சர்க்கார் ஜன்னத் மஹாலில் சு.பாப்பம்பாடி தமிழக கிராம அலுவலரும் தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தி.மலை வட்டக்கிளை தலைவருமான அ.ஷர்புதீனின் பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட துணைத் தலைவர் அ.அரிகிருஷ்ணன் தலைமை தாங்க, வட்ட பொருளாளர் எம்.இளையராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி பணிநிறைவு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் அ.ஷர்புதீனை பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் தாசில்தார் ஆர்.இரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஆர்.சுப்பிரமணி, தலைமையிடத்து துணை தாசில்தார், ஆர்.செந்தில்குமார், மண்டல துணை தாசில்தார் கே.அமுல், வட்ட துணை ஆய்வாளர் ஆர்.வரதராஜன், சங்க மாவட்ட தலைவர் ஆர்.ஜோதிசங்கர், மாவட்ட செயலாளர் இ.வேடியப்பன், முன்னாள் சங்க நிர்வாகிகள் எம்.தங்கராசு, சி.காளிதாஸ், எஸ்.இளங்கோ, கே.ராஜேந்திரன், ஏ.கார்த்திகேயன், ஆர்.கண்ணன், கருணாமூர்த்தி, பி.பழனி, சங்க வட்ட செயலாளர்கள் எம்.அறிவழகன், ஏ.கோபால், வட்ட பொருளாளர் எஸ்.சுதாகர், கல்வியாளர் பி.மாணிக்கம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, முன்னாள் மாநில பொருளாளர் அ.அப்துல்காதர், தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் தோழமை சங்க நிர்வாகிகள் ஏ.அருண்பாட்ஷா, எஸ்.சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் தலைமை ஆசிரியை அ.சம்ஷாத்பேகம், லண்டன் ஷமீம்ஷா, ஆசிரியை ரகமத்துன்னிசா உள்பட வட்ட கிளை நிர்வாகிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் பணிஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரும் வட்ட தலைவருமான அ.ஷர்புதீன் ஏற்புரையாற்றினார். முடிவில் மாவட் செயற்குழு உறுப்பினர் ம.மாதவன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்