முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியிலும் பள்ளி ஆசிரியர்களுக்கு 62 வயது வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தலைவர் செல்வக்குமார் அறிக்கை

புதன்கிழமை, 10 மே 2017      புதுச்சேரி

டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பணிக்காலம் 60 வயதிலிருந்து 62 வயதுவரை 2007 ஆண்டு முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 60 வயது ஓய்விற்குப்பின் தொடர்ச்சியாக 62 வயதுவரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், நுண்கலை ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், துணை முதல்வர்கள் மற்றும் முதல்வர்கள் என அனைத்துப் பிரிவு ஆசிரியர்களுக்கும்இப்பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

 கவர்னரிடம் மனு

ஆனால் புதுச்சேரியில் 60 வயது வரை மட்டுமே பணிக்காலம் உள்ளது. புதுச்சேரியும் யூனியன் பிரதேசம் என்பதால் இங்கும் 62 வயது வரை பணி நீட்டிப்புவழங்க வேண்டுமென கவர்னரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்து தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என்பது நூற்றுக்கணக்கான மூத்த ஆசிரியர்களின் எண்ணமாகும் என்று புதுச்சேரி அரசின் நேரடி நியமன பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்