முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் வாழ்த்து மழையில் இந்திய வீராங்கனைகள்

திங்கட்கிழமை, 24 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.

228 ரன்கள்

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தன. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 228 ரன்கள் சேர்த்தது.

பிரபலங்கள் வாழ்த்து

இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய வீராங்கனைகள் கடுமையாக போராடிய போதும், 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த போதும், இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர்,  உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,

“ நமது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மன உறுதியுடன் வியக்கத்தக்க அளவில் போராடினர். அணியை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், விவிஎஸ் லட்சுமண், அஷ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஷாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட பிற விளையாட்டுத்துறையை சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து