முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் மசூதி இடம் எங்களுடைய உடமை: சுப்ரீம் கோர்ட்டில் ஷியா வக்ப் வாரியம் வாதம்

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாபர் மசூதி இடம் தங்களுக்குச் சொந்தமான உடைமை என்று சுப்ரீம் கோர்ட்டில் உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியம் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய அயோத்தியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் மசூதி கட்ட முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வக்ப் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பாபர் மசூதி இடம் தங்கள் வாரியத்துக்குச் சொந்தமானது எனவே இது குறித்த பேச்சுவார்த்தைக்கு உரியவர்கள் தாங்களே என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது வக்ப் வாரியம்.

வக்ப் வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த 30 பக்க பிரமாணப் பத்திரத்தில் பாபர் மசூதி பிரச்சினைக்குச் சுமுக தீர்வு காண்பதற்காக குழு ஒன்றை தங்கள் தரப்பில் அமைக்க நீதிமன்றம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளது.
சன்னி மத்திய வக்ப் வாரிய நிலைப்பாட்டை புறந்தள்ளிய ஷியா வக்ப் மத்திய வாரியம், “பாபர் மசூதி இடம் ஷியா வக்ப் வாரியத்துக்குச் சொந்தமான இடமாகும். எனவே எந்தவித பேச்சுவார்த்தையை நடத்தவும் பங்கேற்கவும் எங்களுக்கே உரிமை உள்ளது” என்று கூறியுள்ளது.

மேலும் ராமர் கோயில் கட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாமல் ஒரு குறிப்பிடத் தகுந்த தூரத்தில் மசூதியை எழுப்ப முடியும் என்றும் தனது பிரமாணப் பத்திரத்தில் வக்ப் வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து