முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில், “மன அழுத்தம் கண்டறியும் பயோ சென்சார்” சர்வதேச கருத்தரங்கு

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-ஸ்ரீவி.  கலசலிங்கம்  பல்கலையில்,  “மன அழுத்தம்  கண்டறியும்  பயோ சென்சார்” -   “தகவலியல் மற்றும் சிறப்பு  மெய்யுணர்வு  கருவிகள் பற்றிய  சர்வதேச  கருத்தரங்கு  கணிப்பொறி பயன்பாட்டியியல் துறை சார்பில்  தலைப்பில்  துணைத்தலைவர்  முனைவர்  எஸ். சசிஆனந்த்  தலைமையில் நடைபெற்றது.
டீன்  முனைவர் பி. தீபலட்சுமி,  துவக்கி வைத்தார்.
துறைத்தலைவர்  முனைவர்   அமுதகுகா  வரவேற்றுப்பேசினார்.
முனைவர் கே. மகேஸ்வரி  சிறப்பு விருந்தினரை  அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்கா,  ஃபுளோரிடா  சர்வதேச  பல்கலைக்கழக,  பேராசிரியர்  முனைவர்                        எம்.  பாண்டியராஜன்   சிறப்பு  விருந்தினராக  பங்கேற்று,  தகவலியல்  மற்றும் சிறப்பு  மெய்யுணர்வு  கருவிகள்  பற்றிய  ஆராய்ச்சி  தகவல்,  ஆராய்ச்சி  தொடர்பான அமெரிக்காவில்    சமீபத்திய  நிகழ்வுகள்  குறித்து  விளக்கவுரை  ஆற்றினார்.
மனிதர்களை  கண்டறியவும்,  குழந்தை  கடத்தல்  ஒழிப்பு,  வானிலை  தொடர்பான  துரித  நிகழ்வுகளை  கையாளும் சிறப்பு  மெய்யுணர்வு  கருவிகள்,  காட்டு விலங்குகள்  கணக்கெடுப்பு,  மேற்பார்வை  தொடர்பான  உணர்கருவிகள்  குறித்து  காணொலிக்காட்சியுரை வழங்கினார். 
அவர் மேலும் கூறுகையில்,  இத்தகைய  “சென்சார்களை”,  கை விரல்களில்  பொருத்தி இரத்த  ஓட்டத்தை  உணர்ந்து, மன அழுத்தம்  கண்டறியப்படும்  மேலும்  நெஞ்சில்   பொருத்த,p   இதயத்துடிப்பு  மாற்றம்  ஆகும்போது  உடனே  தகவல்  தரும் என்றார்.   இதற்கான  “காப்புரிமைகளை”  தாம் பெற்றுள்ளதாக  விளக்கினார்.
சி.எஸ். இ.,  எம். சி. ஏ.,  சி. எஸ் -  ஐ டி  மாணவ,  மாணவிகள்  கலந்துகொண்டு  பயன்பெற்றனர்
கருத்தரங்கை  பேராசிரியர்  எஸ்.  கார்த்தீஸ்வரன்,  சிறப்பாக   ஏற்பாடு செய்திருந்தார்
பேராசிரியர் முனைவர் எஸ்.  ராம்குமார்   நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து