முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சுரியன் 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 335 ரன்களுக்கு ஆல்-அவுட்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சுரியன் : செஞ்சுரியன் டெஸ்டில் நேற்றைய 4-வதுநாளில் தென்ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றிக்இழக்காக நிர்ணயித்துள்ளது. 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

எல்கர் அரைசதம்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. 3-வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன்னுடனும், டீன் எல்கர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். டி வில்லியர்ஸ் 80 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டி காக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் மொகமது ஷமி வீழ்த்தினார்.

173 ரன்கள்...

5-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளிசிஸ் 12 ரன்னுடனும், பிலாண்டர் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டு பிளிசிஸ் 48 ரன்களுடன் பும்ரா பாலில் ஆட்டமிழந்தார். பிலாண்டர் 26 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் வந்த வீரர்கள் சொற்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா திணறல்

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் 9 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 4 ரன்களுடன் பெவிலியன் திரும்ப இந்திய அணி கேப்டன் விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லங்கி நிஜிடி பந்தில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டானார். புஜாரா 8 ரன்களுடனும், படேல் 1 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தொடர்ந்து விளையாடி வரும் நிலையில் இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ளது. 7 விக்கெட்டுகளுடன் உள்ள இந்திய அணி கடுமையாக முயற்ச்சித்தால் வெற்ற பெற முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து