முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய டென்னிஸ் இரட்டையர் அணியில் பயஸ் - ரோகன்போபண்ணா - திவிஜ் சரண்

திங்கட்கிழமை, 4 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், லியாண்டர் பயஸ் இடம்பெற்றுள்ளார். யுகி பாம்ப்ரி இடம்பெறவில்லை.

12 பேர் அணி...

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம்தேதி வரை இந்தோனேசியாவின் பாலம்பேங் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணியை தேர்வு செய்வதற்காக நேற்று அகில இந்திய டென்னிஸ் அசோசியேசன் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி.மிஷ்ரா தலைமையில் நடைபெற்ற நடந்த இந்த கூட்டத்தில், ஆசிய விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ் இந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்.

ஜீஷான் அலி...

ஆண்கள் அணியில் ஒற்றையர் பிரிவில் ராம்குமார்  ராமநாதன், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரம், சுமித் நாகல், இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ், ரோகன்போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் அணியில், அங்கிதா ரெய்னா, கர்மான் கவு தாண்டி, ருதுஜா போசேல், பிரஞ்சலா யத்லபள்ளி, ரியா பாட்டியா, பிரார்த்தனா தோம்பரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜீஷான் அலி பயிற்சியாளர் மற்றும் ஆண்கள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் அணியை அங்கிதா பாம்பரி வழிநடத்துவார்.

யுகி பாம்ப்ரி அவுட்

நாட்டின் முன்னணி வீரரான யுகி பாம்ப்ரி அணியில் இடம்பெறவில்லை. ஆசிய போட்டி நடைபெறும் அதே காலகட்டத்தில் (ஆகஸ்ட் 27-செப்டம்பர் 9) அமெரிக்க ஓபன் போட்டியும் நடைபெற உள்ளது. எனவே, அமெரிக்க போட்டியில் யுகி பாம்ப்ரிக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆசிய போட்டியில் அவரது பெயரை சேர்க்கவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து