முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் பழிவாங்கலுக்காகவே பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.-யை பயன்படுத்துகிறது - பார்லி.யில் ஆனந்த் ஷர்மா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை அரசியல் பழிவாங்கலுக்காக ஆளும் பா.ஜ.க. அரசு தவறாகப் பயன்படுத்துவதால் நாட்டில் நம்பிக்கையின்மை, அச்சம் மற்றும் பயங்கரவாத சூழ்நிலைக்கு வழிவகுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா குற்றஞ்சாட்டினார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு இப்பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா எம்.பி. பேசுகையில்,

சி.பி.ஐ., வருமான வரித்துறை, மற்றும் அமலாக்கத் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள அதே குற்றச்சாட்டுக்காக அதற்கு இணையான எப்.ஐ.ஆர் மற்றும் பல வழக்குகளை பதிவு செய்யப்படுகின்றன. இவ்வரசு நிறுவனங்கள், அரசாங்கத்தால் அரசியல் பழி தீர்க்கும் நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தப்படக் கூடிய கருவி அல்ல. ஊழல் செயல்பாடுகளுக்கும் நம்பிக்கையூட்டும் முடிவுக்கும் இடையே தெளிவான வேறுபாட்டுகளை உருவாக்க வேண்டும். சில விசாரணை அதிகாரிகள் சில நபர்களைக் குற்றம் புரிந்ததாக ஒப்புதல் வாக்குமூலங்களை கட்டாயப்படுத்தி பெற முயன்று வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பாராளுமன்ற விவகார அமைச்சர் விஜய் கோயல், விசாரணை அமைப்புகள் மீதுள்ள நம்பிக்கையை சர்மா சிதைக்கிறார் என்று தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா  நாயுடு, சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் இருக்கும் போது, சர்மா ஏன் விசாரணை நிறுவனங்களை குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சர்மா, குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே வழக்கிற்கு இணையான இன்னொரு எப்.ஐ.ஆர். வழக்கு பதிவு செய்வதை பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் அதைத் தடுக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து