முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஞ்ஞானிகள் கவலையடைய வேண்டாம் விரைவில் வெற்றியை ஈட்டுவோம் - இஸ்ரோவில் பிரதமர் மோடி பேச்சு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர்  : இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையடைய வேண்டாம், விரைவில் வெற்றியை ஈட்டுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சந்திராயன் - 2 விண்கலத்தின், லேண்டர்  சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண, இஸ்ரோ வந்திருந்த பிரதமர் மோடி, சிக்னல் துண்டிக்கப்பட்டதால் விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம். தைரியமாக இருங்கள் என இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.

இந்த நிலையில் பெங்களூரு இஸ்ரோ மையத்துக்கு அவர் நேற்று மீண்டும் வந்தார். இஸ்ரோ மையத்துக்கு நேற்று மீண்டும் வந்த பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

சில மணி நேரங்களாக ஒட்டுமொத்த தேசமே கவலையுற்று இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது விஞ்ஞானிகளுக்கு ஆதரவை தெரிவிக்க வேண்டும். நமது விண்வெளி திட்டம் என்பது மிகவும் பெருமைக்குரியது. சந்திராயன் -2 ஆராய்ச்சியில் ஏற்பட்ட தடங்கல்  சரி செய்யப்பட்டு நாம் நிலவை தொடுவோம். இன்னும் வலிமையாக உருவெடுப்போம். நாம் மேலும் உயரே பறப்போம். வெற்றியை தொடுவோம். விஞ்ஞானிகளே இந்த நாடே உங்கள் பின்னால் அணி வகுத்து நிற்கிறது. கவலைப்பட வேண்டாம். உங்களது அளப்பரிய பணிகள், அனுபவம், திறன் ஆகியவை இந்தியாவை மென்மேலும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

நமது பயணத்தின் பாதையில் தடைகள் வரத்தான் செய்யும். அதனை தகர்ப்போம். விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கு எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஒத்துழைப்பு, உறுதுணையும் விஞ்ஞானிகளுக்கு மிகவும் அவசியம். உங்கள் கூட்டு உழைப்பு என்னென்றும் வெற்றியை ஈட்டி தரும். எனவே விஞ்ஞானிகள் தொடர்ந்து பெருமையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து