முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள் திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும், வரும் 13-ம் தேதி அதனை முதல்வர் துவக்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்த நிலையில், டி.வி. மூலமாகவே பாடம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள கிராமங்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசின் சார்பில் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளை ஏற்றுக் கொண்டு அதற்கு தேவையான பணிகள் நடைபெறும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. 6,010 பள்ளிகளில் கணிணி வழங்கி கணினி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  டி.வி. மூலமாகத் தான் தற்போது பாடத்திட்டங்களை கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி அடைவார்கள். தேர்வு நடத்த அரசும், தேர்வு நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு எழுத விருப்பம் தெரிவிக்கும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை தயாராக உள்ளது. அந்தந்த பள்ளிகளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது தேர்வு எழுத உள்ளனர். மாணவர், பெற்றோர்களின் நலன் கருதி தமிழக முதல்வர் அனைவருக்கும் ஆல்பாஸ் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் தான் நீட் பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து