முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சகத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட மின் ஆளுமை விருது: முதல்வரிடம் வாழ்த்து பெற்றஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை (Information and Communication Technology Tools) திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட 2018-19ஆம் ஆண்டிற்கான மின் ஆளுமை விருது (e-Panchayat Puraskar) மற்றும் பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  காண்பித்து வாழ்த்து பெற்றார். 

மேலும், ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் 2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சி, திருமங்கலம்  மற்றும் கொங்கணாபுரம் வட்டார ஊராட்சிகள், ஆண்டாங்கோவில் கிழக்கு, குருமந்தூர், அம்புகோவில், நெடுங்கல், இக்கரை பொழுவாம்பட்டி மற்றும் மேவளூர்குப்பம் கிராம ஊராட்சிகள், நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை தேசிய விருது பெற்ற களவனூர் கிராம ஊராட்சி, கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது பெற்ற டி.சி. கண்டிகை கிராம ஊராட்சி, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான  தேசிய விருது பெற்ற அனுமந்தபுரம் கிராம ஊராட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் தனி அலுவலர்கள் தமிழக முதல்வரை  சந்தித்து விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

ஊராட்சி அமைப்புகளின் சிறந்த முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகம் ஆண்டுதோறும் பல்வேறு இனங்களின்  கீழ், மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. 

அந்த வகையில் 2018-19ஆம் ஆண்டிற்கான தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், (Deen Dayal Upadhyay Panchayat Sashaktikaran Puraskar)சிறந்த மாவட்ட ஊராட்சி விருது - தருமபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் - சேலம்  மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும், சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் - கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் (கிழக்கு) கிராம ஊராட்சி,  ஈரோடு மாவட்டம், குருமந்தூர் கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், அம்புகோவில் கிராம ஊராட்சி,  கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் கிராம ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டம், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சி, காஞ்சிபுரம்  மாவட்டம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி ஆகிய ஆறு கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.    

ஊரகப் பகுதி மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வலுவான கிராம சபையின் பங்களிப்புடன் செயல்படுத்தியமைக்கான நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கௌரவ கிராம சபை விருது (Nanaji Deshmuk Rashtriya Gaurav Gram Sabha Puraskar) கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. 

கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த  டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.  

கிராமப்புற குழந்தைகளின் நலனைப்  பேணும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான, குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான  தேசிய விருது விழுப்புரம்  மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அனுமந்தபுரம்  கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. 

மேற்கண்ட விருதுகளை பெற்ற தருமபுரி மாவட்ட ஊராட்சித் தலைவர் எம். யசோதா, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெ. லதா, கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கரட்டூர் கே.கே.மணி, ஆண்டாங்கோவில் கிழக்கு கிராம ஊராட்சித் தலைவர் எஸ். சாந்தி, குருமந்தூர் கிராம ஊராட்சித் தலைவர் என்.சி.தேவி, அம்புகோவில் கிராம ஊராட்சித் தலைவர் கா.சுமன் காளிதாஸ், நெடுங்கல் கிராம ஊராட்சித் தலைவர் பி.மகேஸ்வரன், இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சித் தலைவர் ஏ. சதானந்தம், மேவளூர்குப்பம் கிராம ஊராட்சித் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையம்மாள், களவனூர் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.செந்தில்முருகன், அனுமந்தபுரம் கிராம ஊராட்சி தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர்  சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து