முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ், கடந்த வியாழக்கிழமை சென்னையில் காங்கிரஸ் தலைவா்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அந்த சமயத்தில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து