முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, பாளையங்கோட்டையில் முன்னாள் படை வீரர்களுக்கான நல அலுவலக மைய கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 31 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 70.75 லட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை ரயில் நிலையம் அருகில் 86.35 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டிடங்களைக் காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.  

தமிழகத்தில் சுமார் 1,27,000 முன்னாள் படைவீரர்கள், 56,000 கைம்பெண்கள்  மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் உள்ளனர்.  இவர்களின் நலனுக்காகத் தமிழ்நாடு அரசு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் நலன் மற்றும் குறைகளைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டடம்  கட்டிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

அவ்வகையில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நலநிதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 3002 சதுர அடியில் 70.75 லட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம், மதுரை ரயில் நிலையம் அருகில் 2550 சதுர அடியில் 86.35 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 

 இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் இ. பெரியசாமி, பொதுத்துறைச் செயலாளர் டாக்டர் டி. ஜகந்நாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து