முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிகிறது: 1 - 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

வியாழக்கிழமை, 12 மே 2022      தமிழகம்
Student 2022 05 12

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகின்றன.

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன. மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலையில் தேர்வு எழுதிவிட்டு மதியம் வீட்டிற்கு செல்கின்றனர். இன்று (13-ந்தேதி) கடைசி வேலை நாளாகும். இன்றுடன் தேர்வுகள் முடிகின்றன. 14-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

2 வருடத்திற்கு பிறகு பள்ளி சிறுவர்கள் இந்த வருடம் ஆண்டு இறுதித்தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டது. நாளையுடன் தேர்வு முடிவதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மாதம் கோடை விடுமுறையை கொண்டாடுவதில் ஆர்வமாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து