முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமாவளவனின் தாயார் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். 

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து