முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

’கும்பாரி’ விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2024      சினிமா
Kumbari-review 2024-01-09

Source: provided

கன்னியாகுமரி மாவட்டத்துடன் கேரளாவின் அழகிய பகுதிகளில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆறுமுகத்திற்கு பிரத்தியேக வணக்கம்.

விஜய் விஷ்வா மற்றும் நலீப் ஜியா, சிறு வயது முதல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். விஜய் விஷ்வா மீது நாயகி மஹானாவுக்கு காதல் மலர்கிறது. இந்த காதல் விவகாரம் மஹானாவின் அண்ணன் ஜான் விஜய்க்கு தெரிய வர, அவர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, விஜய் விஷ்வாவை மிரட்டுகிறார். நண்பனை மிரட்டும் ஜான் விஜயை எதிர்க்கும் நலீப் ஜியா, விஜய் விஷ்வா மற்றும் மஹானாவுக்கு திருமணம் செய்து வைப்பேன், நான் உயிருடன் இருக்கும் வரை அதை யாராலும் தடுக்க முடியாது, என்று சவால் விடுகிறார்.

அதன்படி, நண்பனின் திருமண ஏற்பாடுகளை நலீப் ஜியா கவனிக்க, மறுபக்கம் தங்கையை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முயற்சியில் ஜான் விஜய் ஈடுபடுகிறார். இதற்கிடையே, நலீப் ஜியா திடீரென்று காணாமல் போகிறார். அவரை ஜான் விஜய் தான் கொலை செய்திருப்பார், என்று நினைத்து விஜய் விஷ்வா நீதிமன்றத்தில் முறையிடுகிறார். ஆனால், நலீப் ஜியா காணாமல் போனதற்கு ஜான் விஜய் காரணம் அல்ல என்பது தெரிய வருகிறது. நலீப் ஜியா என்ன ஆனார்?, அவர் சொன்னது போல் நண்பன் விஜய் விஷ்வாவுக்கு திருமணம் செய்து வைத்தாரா?, இல்லையா? என்பது தான் ‘கும்பாரி’ படத்தின் கதை.

எழுதி இயக்கியிருக்கும் கெவின் ஜோசப், சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக அவர் தேர்வு செய்த  கதை எதுவாக இருந்தாலும் அதை சொல்லும் விதத்தில் சற்று வித்தியாசத்தை காட்டியிருந்தால் படம் ரசிக்கும்படி  இருந்திருக்கும் மொத்தத்தில் குமாரி திரைப்படம் இயற்கை காட்சிகளை ரசிக்கும் படமாக அமைந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து