முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எப்போதும் ராஜா - பாகம் 1’ விமர்சனம்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2024      சினிமா
Always-King-review 2023-02-

Source: provided

கதை நாயகன் வின் ஸ்டார் அண்ணன், தம்பி என இரண்ட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தம்பி வாலிபால் விளையாட்டு வீரராகவும் இருக்கிறார்கள். நேர்மையான போலீஸ் அதிகாரியான அண்ணனுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள்.  வாலிபால் விளையாட்டில் சாதிக்க துடிக்கும் தம்பிக்கும் பல எதிரிகள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் தங்களது எதிரிகளையும், அவர்களால் வரும் சோதனைகளையும் தாண்டி வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார்கள், என்பது தான் ‘எப்போதும் ராஜா - பாகம் 1’ படத்தின் கதை.

போலீஸ் மற்றும் விளையாட்டு வீரர் என்று முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் வின் ஸ்டார் விஜய், காதல், கோபம், சோகம், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளையும் அசால்டாக வெளிப்படுத்தி அதகளப்படுத்தியிருக்கிறார். 

சந்தானம், யோகி பாபு இணைந்து காமெடி செய்திருந்தால் கூட நாம் இப்படி சிரித்திருக்க மாட்டோம், ஆனால் வின் ஸ்டார் விஜய், அதை வஞ்சனை இல்லாமல் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பல துடிப்பான வசனங்களை பேசி கைதட்டலும் பெறுகிறார்.

இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து ஜாலியாக இருக்க வேண்டுமானால் நிச்சயம் வின் ஸ்டார் விஜயின் இந்த ‘எப்போதும் ராஜா - பாகம் 1’ படம் நம்மை கவலைகளை மறக்க வைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து