முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வில்வித்தைப்போட்டி: இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளி பதக்கம் வென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      விளையாட்டு
Deepika-Kumari-2024-04-28

ஷாங்காய், சீனாவில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அரையிறுதி போட்டி...

சீனாவின் ஷாங்காயில் உலக வில்வித்தைப்போட்டி நடைபெற்று வருகிறது. உலக வில்வித்தை மகளிர் தனிநபர் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி உள்பட, தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகொய நால்வர் தகுதிபெற்றனர்.

தென்கொரிய வீராங்கனை...

இந்த நிலையில், அரையிறுதியில் தென்கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதையடுத்து, 2-ம் இடம் பிடித்த உலகின் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய கோப்பையில்... 

கடந்த டிசம்பரில் தீபிகா குமாரிக்கு(29) குழந்தை பிறந்த நிலையில், பேறுகால ஓய்வுக்குப் பின், மீண்டும் வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், பிப்ரவரியில் பாக்தாத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து